பஜகோவிந்தம்/ மோஹமுத்கரம்/
ஆதி
சங்கராச்சாரியரால் இயற்றப்பட்ட இந்த ஞானப்புதையலின் உண்மையான பெயர் ‘மோஹமுத்கரம்’
என்பது. ‘முத்கரம்’ என்றால் ‘சம்மட்டி’ என்று பொருள். மனிதனின் மோஹத்தை சம்மட்டி
கொண்டு அடித்துச் சிதைக்கும் முயற்சி தான் இந்த பஜகோவிந்தம்.
(
ஒரு சிறு விளக்கம்: மோஹம் (मोह) என்பதும் மோகம் (मोघ) என்பதும் வேறு வேறு. மோஹம்
(मोह) என்பது மாயையால் விளையும் ஒருவித
மயக்கம். – (illusion). இது ஒரு பெயர்ச்சொல். மோக (मोघ) என்றால், குறியை எட்டாதது,
வீணாகக்கூடியது, என்று பொருள். இது ஒரு உரிச்சொல். (adjective). ஆகவே தான் அந்த
விழா அமோகமாக (अमोघ) நடந்தது என்று சொல்லும் போது, (குறி தப்பாமல், வீணாகாமல்) மிகச்
சிறப்பாக நடந்தது என்று பொருள்படுகிறது. )
காசியில்
ஆதி சங்கரர் தன் சீடர்களுடன் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த பொழுது, ஒரு வயதான
இலக்கண பண்டிதர் பாணினியின் இலக்கணத்தில் ஒரு கடினமான் பகுதியைப் புரிந்து கொள்ள
மிகவும் முயற்சி செய்து கொண்டிருந்தார். அதைக் கண்ட இளைஞரான சங்கரருக்கு அவர் மேல்
இரக்கம் பிறந்தது. இன்னும் எத்தனை காலம் இருக்கப் போகிறாரோ? இருக்கும் சிறிது
காலத்தை இறைவனை நினைத்துக் கழிப்பதை விட்டு, இலக்கணம் கற்பதால், என்ன பயன் என்று
நினைத்த சங்கரர் வாயில் இருந்து இந்த ஸ்லோகங்கள் மழையாகப் பொழிந்தன. அதைக்கேட்ட
அவரது பதினான் கு சீடர்களும், ஆளுக்கு ஒன்றாக, பதினான்கு ஸ்லோகங்களை
இயற்றினார்கள். முதல் ஸ்லோகம் திரும்பத் திரும்ப வருவது. 2ம் ஸ்லோகத்தில்
இருந்து 13ம் ஸ்லோகம் வரை சங்கரர் இயற்றிய் 12 ஸ்லோகங்கள்
‘த்வாதச மஞ்சரிகா ஸ்தோத்திரம்’ என்றும் அதன் பின் அவருடைய சீடர்கள் இயற்றிய 14 ஸ்லோகங்கள்
‘சதுர்தச மஞ்சரிகா ஸ்தோத்திரம்’ என்றும் அழைக்கப்படுகின்றன. இறுதியில், இன்னும்
சில ஸ்லோகங்களை சங்கரர் இயற்றிச் சேர்த்தார்.
அர்ஜுனனை
நிமித்தமாக வைத்துக் கொண்டு, பகவான் க்ருஷ்ணர் மனித குலத்துக்கு அருளிய
பகவத்கீதையைப் போல, ஒரு வயதான பண்டிதரை நிமித்தமாக வைத்துக் கொண்டு, அறியாமையில்
உழலும் மனித குலம் முழுவதற்கும் நல்லறிவு வர வேண்டும் என்பதற்காக, இந்த மோக முத்கரத்தை
சங்கரர் இயற்றியுள்ளார்.
இதன்
சொற்களும் வாக்கிய அமைப்பும் மிகவும் எளிமையானவை. ஆனால், அவை சொல்லும் செய்தியோ,
மிகவும் ஆழமானது. மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கத் தக்கது.
சங்கரர்
சிறிது கோபத்துடனே தான் இதை இயற்றியிருக்கிறார். அறியாமையில் உழல்பவர்களை ‘மூடமதி’
என்று அழைக்கிறார்.
தலையில்
சம்மட்டியால் அடித்துப் புரிய வைப்பது போல், கடுமையான வார்த்தைகளால், சங்கரர் நமக்கு அறிவுறுத்துகிறார். அதன் ஊடே,
அழகுணர்ச்சியும் இழைந்து, கேட்பதற்கும், ரசிப்பதற்கும் சுகமாக இருக்கிறது.
அத்துடன் நின்று விடாமல் அதை எண்ணி எண்ணி, நம் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள
வேண்டும் என்பது தான் சங்கரரின் நோக்கமாக இருந்திருக்கிறது. இதை எம். எஸ்.
சுப்புலட்சுமியின் குரலில் கேட்டுக் கிறங்கியிருப்பவர் அனேகம் பேர். அதன் பொருளும்
புரிந்தால், பொன்மலர் நாற்றம் உடைத்தது போல் ஆகும்.
भज गोविन्दं भज
गोविन्दं
गोविन्दं भज
मूढमते ।
सम्प्राप्ते
सन्निहिते काले
नहि नहि रक्षति
डुकृङ्करणे ॥ १॥
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூட மதே|
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே
நஹி நஹி ரஷதி டுக்ரிங் கரனே ||1||
(‘டுக்ருங்கரணம்’
என்பது ஸம்ஸ்க்ருதத்தில், கடினமான இலக்கண விதி)
मूढ जहीहि
धनागमतृष्णां
कुरु सद्बुद्धिं
मनसि वितृष्णाम् ।
यल्लभसे
निजकर्मोपात्तं
वित्तं तेन
विनोदय चित्तम् ॥ २॥
மூட ஜஹீஹி தநாகமத்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மநஸி வித்ருஷ்ணாம்|
யல்லபஸே நிஜகர்மோ பாத்தம்
வித்தம் தேந விநோதய சித்தம் ॥ 2॥
மூடனே! பொருள் சேர்க்கும் தாகத்தை விட்டு
விடு. நல்ல எண்ணங்களுடன், மனதில் ஆசையில்லாமல் செய்து கொள். உன்னுடைய கர்ம பலன்
களின் படி உனக்கு என்ன கிடைக்கிறதோ,
அதைக்கொண்டு, மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்து.
नारीस्तनभरनाभीदेशं
दृष्ट्वा मा गा
मोहावेशम् ।
एतन्मांसवसादिविकारं
मनसि विचिन्तय
वारं वारम् ॥ ३॥
நாரி-ஸ்தன-பர-நாபி-தேசம்
த்ரிஷ்ட்வா மா கா மோஹாவேஸம்|
ஏதந்மாம்ஸ-வஸாதி-விகாரம்
மநஸி விசிந்தய வாரம் வாரம் ॥ 3॥
மங்கையரின் மார்பையும், தொப்புளையும்
பார்த்து மோஹவசப்படாதே! அவைகள் மாமிசமும் கொழுப்பும் சேர்ந்த, மாறு பட்ட உருவங்கள்
தாம். இதை மீண்டும் மீண்டும், மனதில் நினைத்துக் கொள்ள மறக்காதே!
तद्वज्जीवितमतिशयचपलम्
।
विद्धि
व्याध्यभिमानग्रस्तं
लोकं शोकहतं च
समस्तम् ॥ ४॥
நளிநீ-தள-கத-ஜலமதி தரளம்
தத்வஜ் ஜீவித மதிசய சபலம்|
வித்தி வ்யாத்யபிமான க்ரஸ்தம்
லோகம் சோகஹதம் ச ஸமஸ்தம்॥ 4॥
தாமரை இலையில்
மேல் விழுந்த நீரைப்போல நிலையில்லாமல், மாறிக்கொண்டிருக்கும் வாழ்க்கை இது. இந்த
உலகம் முழுவதும், நோய்க்கும், தன் முனைப்புக்கும் உட்பட்டு அதனால் துன்பத்தில்
உழன்று கொண்டிருக்கிறது என்பதை நிச்சயமாக அறிந்து கொள்.
यावद्वित्तोपार्जनसक्त-
स्तावन्निजपरिवारो
रक्तः ।
पश्चाज्जीवति
जर्जरदेहे
वार्तां कोऽपि न
पृच्छति गेहे ॥ ५॥
யாவத் வித்தோ பார்ஜந ஸக்த:
தாவத் நிஜ- பரிவாரோ ரக்த:|
பஸ்சாத் ஜீவதி ஜர்ஜர-தேஹே
வார்த்தாம் கோபி ந ப்ருச்சதி கேஹே॥ 5॥
ஒருவன் நன்றாகப்
பணம் சம்பாதித்துத் தன் குடும்பத்தை காப்பாற்றும் வரை, அவன் மீது அவனுடைய
குடும்பம் அன்பைப் பொழிகிறது. ஆனால், வயது முதிர்ந்து, உடல் தளர்ந்த பின், அதே
குடும்பத்தில் அவனிடம் ஒரு வார்த்தை பேசுவதற்குக்கூட ஒருவரும் இருப்பதில்லை.
यावत्पवनो
निवसति देहे
तावत्पृच्छति
कुशलं गेहे ।
गतवति वायौ
देहापाये
भार्या बिभ्यति
तस्मिन्काये ॥ ६॥
யாவத் பவதோ நிவஸதி தேஹே
தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே|
கதவதி வாயெள தேஹா பாயே
பார்யா பிப்யதி தஸ்மிந் காயே ॥ 6॥
बालस्तावत्क्रीडासक्तः
तरुणस्तावत्तरुणीसक्तः
।
वृद्धस्तावच्चिन्तासक्तः
परमे ब्रह्मणि
कोऽपि न सक्तः ॥ ७॥
பாலஸ் தாவத் க்ரீடா ஸக்த:
தருணஸ் தாவத் தருணீ ஸக்த: |
வ்ருத்தஸ் தாவச் சிந்தா ஸக்த:
பறமே ப்ரஹ்மணி கோ(அ)பி ந ஸக்த: ॥ 7 ॥
संसारोऽयमतीव
विचित्रः ।
कस्य त्वं कः
कुत आयात-
स्तत्त्वं
चिन्तय तदिह भ्रातः ॥ ८॥
காதே காந்தா கஸ்தே புத்ர:
ஸம்ஸாரோ (அ)யம் அதீவ விசித்ர: |
கஸ்ய த்வம் க: குத ஆயாத:
தத்வம் சிந்தய ததிஹ ப்ராத: ॥ 8॥
யார் உனது
மனைவி? யார் உன்னுடைய மகன்? இந்த உலகம் விசித்திரமானது. நீ யாருடையவன்? எங்கிருந்து வந்திருக்கிறாய்?
தம்பி, இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் ஆழமாக யோசி.
सत्सङ्गत्वे
निस्सङ्गत्वं
निस्सङ्गत्वे
निर्मोहत्वम् ।
निर्मोहत्वे
निश्चलतत्त्वं
निश्चलतत्त्वे
जीवन्मुक्तिः ॥ ९॥
ஸத்ஸங்கத்தவே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்|
நிர்மோஹத்வே நிஸ்சலதத்வம்
நிஸ்சலதத்வே ஜீவந்முக்தி: ॥ 9 ॥
சத்சங்கத்தினால் (நல்லவர்களுடைய சேர்க்கையினால்) பற்றற்ற நிலை வருகிறது. பற்றற்ற நிலையினால், மோஹம் விலகுகிறது. மோஹம் விலகினால், சலனமற்ற மன நிலை உண்டாகிறது. சலனமற்ற மன நிலையால் இந்த ஜீவன் முக்தி அடைகிறது.
वयसि गते कः
कामविकारः
शुष्के नीरे कः
कासारः ।
क्षीणे वित्ते
कः परिवारः
ज्ञाते तत्त्वे
कः संसारः ॥ १०॥
வயஸி கதே க: காமவிகார:
சுஷ்கே நீரே க: காஸார: |
க்ஷீணே வித்தே க: பரிவார:
ஞாதே தத்வே க: ஸம்ஸார: ॥ 10 ॥
வயதாகிப்போனால்,
காம விகாரங்கள் எங்கே போகின்றன? நீர் இல்லாத போது, குளம் என்பது எங்கே இருக்கிறது?
( அது பள்ளம் தான்; குளம் அல்ல) செல்வம் நம்மை விட்டுச் சென்ற பின், நம்முடன்
இருந்த உறவினர் எங்கே சென்றார்கள்? இந்த உண்மையை உணர்ந்து விட்டால், சம்சாரம்
என்பது எங்கே இருக்கிறது?
मा कुरु
धनजनयौवनगर्वं
हरति
निमेषात्कालः सर्वम् ।
मायामयमिदमखिलं
हित्वा var बुध्वा
ब्रह्मपदं त्वं
प्रविश विदित्वा ॥ ११॥
மா குரு தந-ஜந-யெளவந-கர்வம்
ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம் |
மாயா மயமித மகிலம் ஹித்வா
ப்ரஹ்ம-பதம் த்வம் ப்ரவிச விதித்வா ॥11॥
என்னிடம் நிறைய
செல்வம், மக்கள்பலம், இளமை இதெல்லாம் இருக்கிறது என்று பெருமைப்பட்டுக்கொள்ளாதே.
ஒரே நிமிடத்தில், காலன் இவையனைத்தையும் பறித்துக் கொண்டு விடுவான். மாயா நிறைந்த
இந்த உலகத்தில் இருந்து உன்னை விடுவித்துக்கொண்டு, பிரம்ம பதத்தை அடைவாய்!
दिनयामिन्यौ
सायं प्रातः
शिशिरवसन्तौ
पुनरायातः ।
कालः क्रीडति
गच्छत्यायु-
स्तदपि न
मुञ्चत्याशावायुः ॥ १२॥
தின-யாமின்யெள ஸாயம் ப்ராத:
சிசிர-வசந்தெள புனராயாத: |
கால: க்ரீடதி கச்சத்யாயு:
ததபி ந முஞ்சத்யாசா-வாயு: ॥12॥
பகலும், இரவும்,
மாலையும், காலையும், பனிக்காலமும், வஸந்த காலமும், மீண்டும் மீண்டும் வந்து
போகின்றன. காலம் நம்முடன் விளையாடுகிறது. நம் ஆயுள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைகிறது.
ஆனாலும், ஆசை என்னும் புயல் காற்று மட்டும் நம்மை விட்டு நீங்குவதில்லை.
का ते कान्ता धनगतचिन्ता
वातुल किं तव
नास्ति नियन्ता ।
त्रिजगति
सज्जनसङ्गतिरेका
भवति
भवार्णवतरणे नौका ॥ १३॥
கா தே காந்தா-தந-கத-சித்தா
வாதுல ! கிம் தவ நாஸ்தி நியந்தா |
த்ரிஜகதி ஞ்ஜ்ஜந-ஸங்கதிரேகா
பவதி பவார்ணவ-தரணே நெளகா ॥13॥
பைத்தியக்காரனே! ஏன் மனைவி, செல்வம்
ஆகியவை பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறாய்? உன்னைக் கட்டுபடுத்துபவர்கள் யாருமே
இல்லையா? இந்த மூன்று உலகிலும், இந்தப் பிறவிக்கடலைக் கடக்க உதவும் படகு என்பது
நல்லோர் சேர்க்கை மட்டும் தான். ( உடனே அந்தப் படகில் ஏறிக்கொண்டு விடு.)
द्वादशमञ्जरिकाभिरशेषः
कथितो वैयाकरणस्यैषः
।
उपदेशोऽभूद्विद्यानिपुणैः
श्रीमच्छङ्करभगवच्छरणैः
॥ १३अ ॥
த்வாதச
மஞ்சரிகாபிரசேஷ:
கதிதோ
வையாகரணஸ்யைஷ: |
உபதேசோ(அ)பூத்
வித்யா நிபுணை:
ஸ்ரீமச்சங்கர பகவச்சரணை: || 13. அ ||
பன்னிரண்டு ஸ்லோகங்கள் கொண்ட இந்தக்
கவிதைக்கொத்து, ஒரு இலக்கண பண்டிதருக்காக, ஸ்ரீமத் பகவத்பாதர் என்று போற்றப்பட்ட அனைத்தும் அறிந்த சங்கராச்சாரியரால் வழங்கப்பட்டது.
இனி வரும் பதினான்கு ஸ்லோகங்கள் ‘சதுர்தச மஞ்சரிகா’ என்ற பெயரில் அறியப்படுகின்றன.
जटिलो मुण्डी लुञ्छितकेशः
काषायाम्बरबहुकृतवेषः
।
पश्यन्नपि च न
पश्यति मूढो
ह्युदरनिमित्तं
बहुकृतवेषः ॥ १४॥
ஜடிலோ முண்டி லுஞ்சித கேச:
காஷாயம்பர-பஹுக்ருத வேஷ: |
பஸ்யந்நபி ச ந பஸ்யதி மூடோ
ஹ்யுதர-நிமித்தம் பஹுக்ருத வேஷ: ||15||
சிலர் ஜடாமுடி
அணிந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் தலையை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வேறு சிலரது தலையில் முடிகள் இங்கும் அங்குமாகப் பிடுங்கப் பட்டுள்ளன. சிலர் காவி உடை உடுத்தியுள்ளார்கள். மற்றவர்கள்
வேறு வேறு நிறத்தில் உடை அணிந்து, வயிற்றுப் பிழைப்புக்காக வேறு வேறு வேஷம்
போடுகிறார்கள். கண் முன்னே உண்மையைக் கண்டாலும், மூடர்கள் அதைப் புரிந்து
கொள்வதில்லை.
अङ्गं गलितं
पलितं मुण्डं
दशनविहीनं जातं
तुण्डम् ।
वृद्धो याति
गृहीत्वा दण्डं
तदपि न
मुञ्चत्याशापिण्डम् ॥ १५॥
அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தசந-விஹீநம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபி ந முஞ்சத்யாசா பிண்டம் ||16||
அந்த மனிதருடைய உடலில் இருந்த சக்தி
போய்விட்டது. தலை நரைத்து விட்டது. ஈறுகள், பற்களை இழந்து விட்டன. வயதாகி
விட்டதால், கைத்தடி வைத்துக்கொண்டு தான் நடக்கிறார். ஆனாலும், ஆசை என்னவோ, விட்ட
பாடில்லை.
रात्रौ
चुबुकसमर्पितजानुः ।
करतलभिक्षस्तरुतलवास-
स्तदपि न
मुञ्चत्याशापाशः ॥ १६॥
அக்ரே வஹ்நி: ப்ருஷ்டே பாநு:
ராத்ரெள சுபுக-ஸமர்(ப்)பித ஜாநு: |
கர-தல-பிஷஸ் தருதல வாஸ:
ததபி ந முஞ்சத் யாசா-பாச: || 17 ||
அங்கே ஒருவன்
முன் புறம் நெருப்பு மூட்டிப் பின்புறம் சூரியனின் வெப்பத்துடன் குளிர் காய்ந்து
கொண்டிருக்கிறான். இரவில், முழங்கால்களுக்கிடையே தலையை வைத்து, உடலைக்
குறுக்கிக்கொண்டு, குளிரில் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளப் பார்க்கிறான். உள்ளங்கைகளையே
பாத்திரமாக்கிப் பிச்சை எடுத்து உண்கிறான். மரத்தினடியே வாசம் செய்கிறான்.
ஆனாலும், ஆசையின் தளையில் இருந்து அவன் விடுபடவேயில்லை.
कुरुते
गङ्गासागरगमनं
व्रतपरिपालनमथवा
दानम् ।
ज्ञानविहीनः
सर्वमतेन
भजति न मुक्तिं जन्मशतेन
॥ १७॥
குருதே கங்கா-ஸாகர-கமநம்
வ்ரத-பரிபாலநமதவா தாநம் |
ஞ்ஞாந-விஹீந: ஸர்வமதேந
முக்திம் ந பஜதி ஜந்மசதேந || 17 ||
ஒருவன்
கங்கைக்குப் போகலாம், விரதங்களை அனுசரிக்கலாம், தன் செல்வத்தைத் தாராளமாக தானம்
செய்யலாம். ஆயினும், உண்மையான ஞானம் இல்லாதவன், நூறு பிறப்புகள் எடுத்தாலும்,
முக்தி அடைய முடியாது.
सुरमंदिरतरुमूलनिवासः
शय्या भूतलमजिनं
वासः ।
सर्वपरिग्रहभोगत्यागः
कस्य सुखं न
करोति विरागः ॥ १८॥
ஸுர-மந்திர-தரு-மூலநிவாஸ:
சய்யா பூதலமஜிநம் வாஸ: |
ஸர்வ-பரிக்ரஹ-போக-த்யாக:
கஸ்ய ஸுகம் ந கரோதி விராக: || 18 ||
ஆலயத்திக்குள்ளோ அல்லது மரத்தடியிலோ,
தங்கி, மான் தோலை உடையாக அணிந்து, வெறும்
தரையின் மேல் படுத்துறங்கி, அனைத்து விதமான போகங்களையும் தியாகம் செய்து விட்ட
துறவி, எவ்வாறு திருப்தி இல்லாமல் இருப்பான்?
(தியாகத்தில் தான் உண்மையான சுகம்
உள்ளது.)
योगरतो वा
भोगरतो वा
सङ्गरतो वा
सङ्गविहीनः ।
यस्य ब्रह्मणि
रमते चित्तं
नन्दति नन्दति
नन्दत्येव ॥ १९॥
யோகரதோ வா போகரதோ வா
ஸங்கரதோ வா ஸங்கவிஹீந: |
யஸ்ய ப்ரஹ்மனி ரமதே சித்தம்
நந்ததி நந்ததி நந்தத்யேவ || 19 ||
ஓருவன்
யோகத்தில் ஆழ்ந்து இருக்கலாம் அல்லது போகத்தில் ஆழ்ந்து இருக்கலாம். பற்றுடன்
இருக்கலாம் அல்லது பற்றற்று இருக்கலாம். எவன் ஒருவனுடைய மனம் எப்பொழுதும்
பிரம்மத்தில் லயித்திருக்கிறதோ, அவனுடைய ஆனந்தத்துக்கு அளவே இல்லை. ( ‘நந்ததி,
நந்ததி, நந்ததி’ என்று மூன்று முறை கூறுவதன் மூலம் அவனுடைய ஆனந்தம் எல்லையற்றது
என்பதைக் கவி உறுதிப்படுத்துகிறார்.)
भगवद्गीता
किञ्चिदधीता
गङ्गाजललवकणिका
पीता ।
सकृदपि येन
मुरारिसमर्चा
क्रियते तस्य
यमेन न चर्चा ॥ २०॥
பகவத்-கீதா கிஞ்சிததீதா
கங்கா-ஜல-லவ-கணிகா பீத |
ஸக்ருதபி யேந முராரி-ஸமர்ச்சா
க்ரியகே தஸ்ய யமேந ந சர்ச்சா || 20 ||
ஓருவன் சிறிதளவாவது பகவத் கீதையைப்
படித்தாலோ, ஒரு துளி கங்கை நீரையாவது குடித்தாலோ, மிகச்சிறிது நேரமாவது முராரியைப்
பூஜித்தாலோ, அவனுக்கு யமனால் எந்தப் பிரச்சினையும் இருக்காது.
पुनरपि जननं
पुनरपि मरणं
पुनरपि जननीजठरे
शयनम् ।
इह संसारे
बहुदुस्तारे
कृपयाऽपारे पाहि
मुरारे ॥ २१॥
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ-ஜடரே சயநம் |
இஹ ஸம்ஸாரே பஹுதுஸ்தாரே
க்ருபயா (அ)பாரே பாஹி முராரே || 21 ||
மீண்டும் பிறப்பு, மீண்டும் இறப்பு,
மீண்டும், தாயின் கருவறையில் உறக்கம்! இந்த சம்சாரம் என்னும் கடலைக் கடப்பது
மிகவும் கடினம். ஓ முராரி! கருணை கூர்ந்து என்னைக் காப்பாற்று.
रथ्याचर्पटविरचितकन्थः
पुण्यापुण्यविवर्जितपन्थः
।
योगी
योगनियोजितचित्तो
रमते
बालोन्मत्तवदेव ॥ २२॥
ரத்யா-சர்(ப்)பட-விரசித-கந்த:
புண்யாபுண்ய-விவர்ஜித-பாந்த: |
யோகீ யோக-நியோஜித-சித்தோ
ரமதே பாலோந்மத்தவதேவ
|| 22 ||
சாலைகளில் கிழிந்த துணிகள் கிடக்கும்
வரை, ஒரு துறவிக்குத் துணிப்பஞ்சம் இல்லை. நல்ல குணங்களையும், தீய குணங்களையும்
கடந்து அவர் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். இறைவனுடன் தொடர்பில் இருப்பவன்
ஆனந்தத்தை அனுபவிக்கிறான். எந்தவிதமான மாசும் இல்லாமல், குழந்தையைப் போலும்,
போதைக்குட்பட்டவன் போலும், தன்னை மறந்த இன்ப நிலையில் அவன் இருக்கிறான்.
कस्त्वं कोऽहं
कुत आयातः
का मे जननी को
मे तातः ।
इति परिभावय
सर्वमसारम्
विश्वं
त्यक्त्वा स्वप्नविचारम् ॥ २३॥
கஸ்த்வம் கோ’ஹம் குத ஆயாத:
கா மே ஜநநீ கோ மே தாத: |
இதி பரிபாவய ஸர்வமஸாரம்
விச்வம் த்யக்த்வா ஸ்வப்ந விசாரம் || 23 ||
நீ யார்? நான் யார்? நான் எங்கிருந்து
வந்தேன்? யார் என்னுடைய தாயார்? யார் என்னுடைய தந்தையார்? இதைப் பற்றியெல்லாம்
யோசித்து சாரமற்ற இந்த உலகை, ஒரு அர்த்தமில்லாத கனவாகக் கருதித் துறந்துவிடு.
त्वयि मयि
चान्यत्रैको विष्णु-
र्व्यर्थं
कुप्यसि मय्यसहिष्णुः ।
भव समचित्तः
सर्वत्र त्वं
वाञ्छस्यचिराद्यदि
विष्णुत्वम् ॥ २४॥
த்வயி மயி சாந்யத்ரைகோ விஷ்ணு:
வ்யர்தம் குப்பயஸி மய்யஸஹிஷ்ணு: |
பவ ஸமசித்த: ஸர்வத்ர த்வம்
வாஞ்சஸ்யசிராத் யதி விஷ்ணுத்வம் ||
24 ||
உன்னில்,
என்னில், மற்று அனைத்திலும் இருப்பவன் விஷ்ணுவே தான். சகிப்புத்தன்மை இல்லாமல் நீ
வீணாகக் கோபம் கொள்கிறாய். விஷ்ணுவின் தன்மையை நீ அடைய விரும்பினால்,
எல்லாவற்றையும் சமமாகப் பார்க்கும் மன நிலையை வளர்த்துக்கொள்.
शत्रौ मित्रे
पुत्रे बन्धौ
मा कुरु यत्नं
विग्रहसन्धौ ।
सर्वस्मिन्नपि
पश्यात्मानं
सर्वत्रोत्सृज
भेदाज्ञानम् ॥ २५॥
சத்ரெள மித்ரே புத்ரே பந்தெள
மா குரு யத்னம் விக்ரஹ-ஸந்தெள |
ஸர்வஸ்மின்னபி பச்யாத்மானம்
ஸர்வத்ரோத்ஸ்ருஜ பேதாஜ்ஞானம் || 25 ||
உன்னுடைய விரோதிகளிடத்திலோ,
நண்பர்களிடத்திலோ, புதல்வர்களிடத்திலோ, உறவினர்களிடத்திலோ, அனாவசியமாக உறவு
கொண்டாடவோ, சண்டை போடவோ முயல வேண்டாம். எல்லாவற்றிலும் உன்னைக்காண முயற்சி செய்து,
ஒன்று மற்றதிலிருந்து வேறு பட்டது என்னும் எண்ணத்தைக் களைந்து விடு.
कामं क्रोधं
लोभं मोहं
त्यक्त्वाऽऽत्मानं
भावय कोऽहम् । var पश्यति सोऽहम्
आत्मज्ञानविहीना
मूढा-
स्ते पच्यन्ते
नरकनिगूढाः ॥ २६॥
காமம் க்ரோதம் லோபம் மோஹம்
த்யக்த்வா,(ஆ)த்மானம் பாவய கோ’(அ)ஹம்
ஆத்மஜ்ஞாந-விஹீனா மூடா:
தே பச்யந்தே நரகநிகூடா: || 26 ||
காமத்தையும்,
கோபத்தையும், பேராசையையும், மோகத்தையும் விடுத்து, ‘நான் யார்’ என்னும்
விசாரத்தில் ஈடுபடு. ஆத்மாவைப்பற்றிய அறிவற்ற மூடர்கள், நரகத்தில் எறியப்பட்டு
அங்கேயே துன்புறுகிறார்கள்.
गेयं
गीतानामसहस्रं
ध्येयं
श्रीपतिरूपमजस्रम् ।
नेयं सज्जनसङ्गे
चित्तं
देयं दीनजनाय च
वित्तम् ॥ २७॥
கேயம் கீதா-நாமஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதி-ரூபமஜஸ்ரம் |
நேயம் ஸஜ்ஜந-ஸங்கே சித்தம்
தேயம் தீநஜநாய ச வித்தம் || 27 ||
பகவத்கீதையையும், விஷ்ணுவின் ஆயிரம்
நாமங்களையும் எப்போதும் பாட வேண்டும். ஸ்ரீபதியான விஷ்ணுவின் உருவத்தை இடையறாது தியானிக்க
வேண்டும். நல்ல மனம் படைத்த சான்றோருடன் இருப்பதில் மனத்தைச் செலுத்த வேண்டும்.
ஏழைகளுக்கும், தேவைப்படுவோர்களுக்கும் பொருளைத் தானம் செய்ய வேண்டும். ( இந்த
ஸ்லோகத்தில் வரும், ‘கேயம்’, ‘த்யேயம்’, ‘நேயம்’, ‘தேயம்’ ஆகிய சொற்கள்,
பொருத்தமான பொருள் தருவது மட்டுமன்றிக் கேட்பதற்கும் இனிமையாக ஒலிக்கின்றன.)
सुखतः क्रियते
रामाभोगः
पश्चाद्धन्त
शरीरे रोगः ।
यद्यपि लोके
मरणं शरणं
तदपि न मुञ्चति
पापाचरणम् ॥ २८॥
ஸுகத: க்ரியதே ராமாபோக:
பச்சாத் த(ஹ)ந்த சரீரே ரோக: |
யத்யபி லோகே மரணம் சரணம்
ததபி ந முஞ்சதி பாபாசரணம் || 28 ||
உடல் இன்பத்தில் அளவுக்கு மீறி ஈடுபடுபவன்
இறுதியில் நோய்வாய்ப்படுகிறான். இறுதியில் மரணத்தைத் தான் சரணடைய வேண்டும் என்பது
தெரிந்தாலும், மனிதன் பாவகாரியங்களில் இருந்து விடுபடுவதில்லை.
अर्थमनर्थं भावय
नित्यं
नास्तिततः
सुखलेशः सत्यम् ।
पुत्रादपि धनभाजां
भीतिः
सर्वत्रैषा
विहिता रीतिः ॥ २९॥
அர்த்தமநர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம் |
புத்ராதபி தந-பாஜாம் பீதி:
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி: || 29 ||
செல்வம்
ஒருபோதும் நன்மை பயப்பதில்லை. அதில் ஒரு சிறிது கூட இன்பம் இல்லவே இல்லை. செல்வந்தன்
தன் மகனைப் பார்த்துக் கூட பயப்படுகிறான். எல்லா இடங்களிலும் இப்படித்தான்
நடக்கிறது.
प्राणायामं
प्रत्याहारं
नित्यानित्य
विवेकविचारम् ।
जाप्यसमेतसमाधिविधानं
कुर्ववधानं
महदवधानम् ॥ ३०॥
ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்
நித்யா(அ)நித்ய-விவேக-விசாரம் |
ஜாப்ய-ஸமேத-ஸமாதி-விதானம்
குர்வவதானம் மஹதவதானம் || 30 ||
மூச்சைப் பிராணாயாமம் மூலம் ஒழுங்கு
படுத்தி, வெளியில் இருந்து வரும் தூண்டுதல்களால் சலனப்படாமல், எது நிலையானது, எது
நிலையற்றது என்பதைப் பற்றி விவேகத்துடன் ஆராய்ந்து, ஜபம் செய்வது மட்டுமன்றித்,
தியானத்தில் ஆழ்ந்து, மனதை அமைதிப் படுத்து. இவையனைத்தையும், கவனமுடன், மிகக்
கவனமுடன் நிறைவேற்று.
गुरुचरणाम्बुजनिर्भरभक्तः
संसारादचिराद्भव
मुक्तः ।
सेन्द्रियमानसनियमादेवं
द्रक्ष्यसि
निजहृदयस्थं देवम् ॥ ३१॥
குருசரணாம்புஜ-நிர்ப்பர-பக்த:
ஸம்ஸாராதசிராத் பவ முக்த: |
ஸேந்த்ரிய-மானஸ-நியாமாதேவம்
த்ரக்ஷ்யஸி நிஜஹ்ருதயஸ்தம் தேவம் || 31||
சுபம்
***
No comments:
Post a Comment